இலங்கையில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 216 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய நாளில் மாத்திரம் 400 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் நெருங்கிய தொடர்புடைய 391 பேர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 9 பேர் ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 171 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 643 ஆக காணப்படுகிறது.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொரோனா கொத்தணியில் 3 ஆயிரத்து 59 பேரும், பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய கொரோனா கொத்தணியில் 13 ஆயிரத்து 580 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்தில் இதுவரை 13 ஆயிரத்து 123 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி முதல், இதுவரையான காலப்பகுதியிலேயே அவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனாத் தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் ஆறாயிரத்து 898 பேரும், கம்பஹா மாவட்டத்தில் ஐயாயிரத்து 883 பேரும், களுத்தறை மாவட்டத்தில் 642 பேரும் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி முதல், இதுவரையான காலப்பகுதியில், கண்டி மாவட்டத்தில் 295 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 265 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 138 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், காலி மாவட்டத்தில் 197 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 67 பேரும், அனுராதபுர மாவட்டத்தில் 55 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனாத் தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலிய மாவட்டத்தில் 57 பேரும், பதுளை மாவட்டத்தில் 37 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 31 பேரும் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 829 ஆக காணபபடுகிறது.

இதேவேளை, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை, கொழும்புரிமான்ட் சிறைச்சாலை, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை, போகம்பரை சிறைச்சாலை மற்றும் பூஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளைச் சேர்ந்த 629 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 200 அதிகரித்துள்ளதாக கொரோனாத் தொற்றை தடுப்பதற்கானதேசிய செயலணி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளமை நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் மற்றும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 53 வயது ஆண் ஒருவர் ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு – பொரளை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதான பெண் ஒருவர் மற்றும் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 479 பேர் குணமடைந்த நிலையில் நேற்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 69 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 15 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரை 7 இலட்சத்து 36 ஆயிரத்து 959 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.