இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பான முழுமையான விபரங்கள்...!

கொவிட்-19 நோயால் நாட்டில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

நீண்டகாலம் நோய்வாய்பட்டிருந்த கந்தானையைச் சேர்ந்த 84 வயதான பெண் ஒருவரே கொவிட் 19 மற்றும் நியூமோனியா காரணமாக உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 356 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்தர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய திவுலபிட்டி, பேலியகொடை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 370 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 595 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.