கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்தோரின் முழு விபரம் வெளியானது.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் புதிதாக 4 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமையே இந்த உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார தரப்பினர் கூறுகின்றனர்.

இதேவேளை, கொழும்பு 15 யை சேர்ந்த 27 வயதான யுவதியொருவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த யுவதிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட சுவாச கோளாறே இந்த யுவதி உயிரிழப்பதற்கான காரணம் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், களுத்துறை பொக்குனுவிட்ட பகுதியைச் சேர்ந்த 59 வயதான பெண்ணொருவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட இரத்த அழுத்தமே உயிரிழப்பிற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை – ஹல்தொட்ட பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆண்ணொருவரும், கொவிட் வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகி வீட்டிலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.