இலங்கையில் திடீர் திடீரென வீதிகளில் இறந்துவிழும் மனிதர்கள் தொடர்பில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி

"கொவிட் தொற்றால் மக்கள் வீதியில் இறந்து கிடப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்" என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொரோனாவால் மக்கள் வீதியில் விழுந்து கிடப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சில கருத்துக்கள் பகிரப்படுகின்றன. நாட்டில் தற்போது கொவிட் தொற்றால் தான் உயிரிழிக்கின்றார்களா என்பது பரிசோதனைகளின் மூலமே உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இதய நோய் அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூட வீதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக உயிரிழக்கக் கூடும். இவ்வாறு உயிரிழப்பவர்களின் பிரேத பரிசோதனைகள் நிறைவடையும் வரை கொவிட் தொற்று என்று கூற முடியாது.

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் இனங்காணப்படுவது அபாயமான நிலைமையாகும். இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.