கண்டி மாவட்டம் கலஹா பிரதேசத்தில் கொரோனா தொற்றாக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கலஹா பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார தரப்பினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
கலஹா பேரவத்தை பகுதியை சேர்ந்த சிறுவனுக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையிலேயே, தொற்றுக்குள்ளான சிறுவன் சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளங் காணப்பட்ட 3 கொரோனா தொற்றாளர்கள்ள தொடர்ந்தும் வைத்திசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment