கொரோனா வைரஸ் அச்சம் தொடர்ந்தும் நிலவுமானால் 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை மேலும் ஒத்திவைக்கப்படலாமென கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டாரவின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.
அத்துடன், திட்டமிட்டபடி கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் நடாத்தப்படுமா என்பது குறித்த தீர்மானம் மேலும் ஒரு வாரகாலப்பகுதிக்குள் எட்டப்படுமெனவும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment