கொரோனாவினால் உயிரிழந்த கிராண்ட்பாஸ் நபரின் ஜனாஸா சற்றுமுன் எரிக்கப்பட்டது!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அகலவத்தை பிம்புர மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 46 வயதான நபரின் ஜனாஸா இன்று (5) மாலை மாகமை, பொலேகொடை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

மேற்படி நபர் ஏற்கனவே பல்வேறு நோய்களாலும் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதன் காரணமாக நேற்று (4) இரவு 8.30 மணியளவில் அகலவத்தை பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணி நேரத்துக்குள் உயிரிழந்தார் என தெரியவருகின்றது.

களுத்துறை பிரதான சட்ட வைத்திய அதிகாரி வைத்திய நிபுணர் சிறியந்த அமரரத்ன மேற்பார்வையின் கீழ் கொரோனா சட்ட விதிகளுக்கு அமைய நடைபெற்ற இறுதிக் கிரியைகளில் உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர் ஒருவரும் கலந்து கொண்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.