பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி மாற்றம் ஏற்படலாம் என கல்வியமைச்சு தகவல்!

சாதாரண தர பரீட்சைக்கு முகம் கொடுக்கும் மாணவர்களின் பாடத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டுள்ள என்பதை அறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இணையத்தளம் ஊடாக தகவல் பெறப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபலி பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை ஜி.சி.ஈ சாதாரண தர பரீட்சை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளை மூன்றாம் தவணைக்காக மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் பாடசாலை ஆரம்பித்தல் மற்றும் எதிர்வரும் நடவடிக்கைகளின் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாடசாலைகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.