தெல்தெனிய தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்லோருக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு.

கம்பளை Eclat Unites அமைப்பானது அதன் தலைவர் இஹ்திஸான் மொஹமட் அவர்களின் தலைமையில், கண்டி மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் கொரோனா தொற்றுக்குள்ளாகி, தெல்தெனிய கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 120க்கும் மேற்பட்டோருக்குத் தேவையான 30,000/= பொறுமதியான உலர் உணவுப் பொருட்கள் தெல்தெனிய பிரதான வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் சமிந்த மற்றும் மெததும்பர பிரதேச செயலாளர் திரு.விக்ரம ஆகியோரிடம் நேற்று(02)  தெல்தெனிய பிரதான வைத்தியசாலையில் வைத்து கையளித்தது.

இந்நிகழ்வு, கண்டி மாவட்ட செயலகத்தின் சமூக சேவை அதிகாரி திரு. நந்தன, தெல்தெனிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் Eclat Unites அமைப்பின் அங்கத்தினர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

அத்தோடு அங்குள்ளவர்களுக்குத் தேவையான மேலதிக தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.