நாட்டில், ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று இரண்டாவது அலையின் போது பதிவான உயிரிழப்புகளில் 42 வீதமானவை 71 வயதிற்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 94 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் 61 முதல் 70 வயதுக்குட்பட்ட 20 பேரும், 51 முதல் 60 வயதிற்குட்பட்ட 16 பேரும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment