தகனம் செய்யும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யக்கூடாது ; குணதாஸ அமரசேகர

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைகின்ற முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த சுகாதார நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தவறான முன்னுதாரணத்தையே வழங்குகின்றது என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இவ்வாறு இன அல்லது மத அடிப்படைவாதிகள் குழுவொன்றினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அமைவான நடைமுறையில் உள்ள சட்டத்தையோ, கொள்கைகளையோ அல்லது விதிமுறைகளையோ மாற்றியமைக்கக்கூடாது என்றும் அவர் மேலும் ஜனாதிபதியை வலியுறுத்தியிருக்கிறார்.

அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மதஅடிப்படைவாதிகளின் தேவைகளுக்கேற்ப செயற்படும் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைகளை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டுவருகின்றது என்ற எண்ணப்பாடு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்களுக்கு அமைவாக நோக்குகையில்,

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைகின்ற முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர்.

கடந்த பாராளுமன்ற அமர்வில் இதுகுறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

அக்கோரிக்கையின்படி எவ்வித இன, மதபேதங்களுமின்றி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களைப் புதைக்காமல், தகனம் செய்யவேண்டும் என்று தொழில்நுட்பக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மீண்டும் மறுபரீசிலனைக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

இவ்வாறு இன அல்லது மத அடிப்படைவாதிகள் குழுவொன்றினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அமைவான நடைமுறையில் உள்ள சட்டத்தையோ, கொள்கைகளையோ அல்லது விதிமுறைகளையோ மாற்றியமைப்பது அல்லது மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதென்பது மிகவும் தவறான முன்னுதாரணமொன்றை வழங்குவதாகவே அமையும் என்பதை உங்களிடம் வலியுறுத்த விரும்புகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.