அக்குறணை பிரதேச சபை பிரிவில் இதுவரை 53 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அக்குறணை பிரதேச சபை பிரிவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவற்கு பிரதேச வாசிகளின் பூரன ஒத்துழைப்பு அவசியம்" என அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் சற்று முன்னர் தெரிவித்தார்.
அவர தொடர்ந்துகருத்து வெளியிடுகையில்
"அக்குறணை பிரதேச சபை பிரிவில் இதுவரை 53 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 90 குடுப்பஙகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்
பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கையை
கவனத்திற்கொண்டு அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெலும்புகஹவத்தை மற்றும் புளுகொஹதென்னை கிராம சேவகர் பிரிவுகள் இன்று இரவு 7.00 மணி முதல் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு சுகாதார துறையினால் கூறப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் அக்குறணை பிரதேச மக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதுடன் அரச பாதுகாப்பு துறை மற்றும் சுகாதார துறையினருக்கு முழுமையாக கட்டுப்பாட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.
அக்குறணை பிரதேச சபை பிரிவு மற்றும் முழு நாட்டிலிருந்தும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விரைவாக மீழுவதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் சுட்டிக்காட்டினார்.
Post a Comment