வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையின் தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளின் மையப் பகுதிகளில் ஒரு குறைந்த அழுத்தம் பிரதேசம் விருத்தியடையக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு தாழமுக்கமாக மேலும் விருத்தியடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் 2020 நவம்பர் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இலங்கையின் வட கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து தொடர்ந்து வரும் நாட்களில் அறிவுறுத்தப்படுவார்கள்.

இதனால் கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதுடன், பல பகுதிகளில் 150 மி.மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்று கூறப்படுகிறது.

மேற்கு, சபராகமுவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல மழை பெய்யும்.

கிழக்கு, வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் மிகவும் வலுவான காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளியுறுத்தப்பட்டுள்ளது.

காற்று

நாட்டைச் சூழவுள்ள கடற் பகுதிகளில் காற்று வடகிழக்கிலிருந்து வீசக்கூடும்.

புத்தளம் முதல் பொத்துவில் வரை, மன்னார் காங்கேசன்துறை, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு வழியான கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியாலயத்துக்கு 70-80 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

புத்தளம் முதல் கொழும்பு வழியாக மாத்தறை வரை கடல் பரப்பளவில் சில நேரங்களில் காற்றின் வேகம் 50-60 கி.மீ. ஆக காணப்படும். ஏனைய கடற் பகுதிகளில் காற்றின் வேகம் 30-40 கி.மீ ஆக இருக்கும்.

கடல்

புத்தளம் முதல் பொத்துவில் வரை மன்னார், காங்கேசன்துரை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வழியான கடற்பகுதிகளில் அலைகளின் தாக்கம் வலுப்பெற்றிருக்கும்.

இதனால் மீனவ சமூகமும், கடற் பயணங்களை மேற்கொள்பவர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.