மஹரசிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்துள்ள கைதிகளின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதென ராகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
Post a Comment