கண்டி - திகன பகுதியில் கட்டிடங்களை நிர்மாணிக்காதீர்கள் - எச்சரிக்கை..!

கண்டி - திகன பகுதியை அண்மித்த பகுதியில் அண்மையில் பதிவான சிறிதளவான நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல இதனை தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் அடங்கும் வகையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பூமியின் உள்ளே காணப்படும் சுண்ணாம்புக்கல் அடுக்கில் ஏற்படும் துளைகள் மற்றும் விரிசல்களுடன் அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக இதுபோன்ற அதிர்வுகள் ஏற்படுகின்றன.

இந்த நில அதிர்வு 2 தொடக்கம் 3 ரிக்டர் அளவில் பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சிறியளவான நில அதிர்வு உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு 3 லட்சம் தடவை இடம்பெறுவதாக அந்த பணியகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய எதிர்காலத்தில் கண்டி - திகன பகுதியினுள் கட்டிடங்களை நிர்மாணிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.