கொரோனா வைரஸ் அச்சநிலைமைக்கு மத்தியில் கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை வெற்றிகரமான முறையில் நடாத்தப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகின்றது.
நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 648 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சநிலைமை காணப்பட்ட போதிலும் கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை வெற்றிகரமான முறையில் நடாத்தப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Post a Comment