லங்கா பிரீமியர் லீக் குறித்து வெளியான முக்கிய தகவல்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்குபற்றும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய உயர் தரமான நடைமுறைகளைப் பின்பற்றிவருவதாகவும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அத்துடன் சுகாதார அமைச்சின் வழிகாட்டலின்படி உயிர்க்குமிழி முறைமை இந்த தொடரில் செயற்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணி வீரர்களினதும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுக்களும் இந்த தொடரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரில் ICC யின் தலைமை போட்டி மத்தியஸ்தர் குழுவைச் சேர்ந்த ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ICC Elite நடுவர் குழாத்தை சேர்ந்த குமார் தர்மசேன போட்டி நடுவராக கலந்துகொள்ளவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2012 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் ICC David shepherd Trophy for umpire of the year விருதை குமார் தர்மசேன வென்றுள்ளார்.

மேலும் ICC சர்வதேச நடுவர் குழாமை சேர்ந்த Ruchira Palliyaguruge, Raveendra Wimalasiri, Lyndon Hannibal, மற்றும் Prageeth Rambukwella ஆகியோரும் லங்கா பிரீமியர் லீக் தொடருக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் முதல்தர போட்டி நடுவர்கள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட நடுவர் குழாம் இந்த தொடருக்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.