குருணாகலை மாநகரசபைக்கு உட்பட்ட இலிப்புகெதர மற்றும் கடவீதிய ஆகிய கிராம சேவகபிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குளியாப்பிட்டிய பொலிஸ்பிரிவில், கலகெதர, கம்மல மற்றும் மேல் கலுகொமுவ ஆகிய கிராம சேவகபிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
Post a Comment