பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் வெளியிட்டுள்ள விசேட செய்தி.

2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனது வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த பிரதமர், மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தீர்வு வழங்கப்படும் என குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோய்த் தொற்றினால் உலகின் அநேக நாடுகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினையினால் இலங்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் மக்களை அரசாங்கம் ஏமாற்றமடையச் செய்யாது. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும் இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்வி மேலும் விரிவுபடுத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இலங்கையில் நூற்றுக்கு 6 சதவீதம் பொருளாதார வளர்ச்சி வேகத்தை முன்னெடுத்து செல்ல எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.