நாட்டில் கொரோனா தொற்று குறித்து தற்போதைய நிலவரம்!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 409 பேர் நேற்று அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 266 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், மினுவாங்கொடை பிரதேசத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் கடந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 581 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவந்த மேலும் 332 பேர் குணமடைந்து நேற்று வீடுகளுக்கு திரும்பிய நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 6 ஆயிரத்து 140 பேர் தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 430 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் 10 ஆயிரத்து 655 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 5 இலட்சத்து 45 ஆயிரத்து 43 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.