கொழும்பிலிருந்து கம்பளை, புப்புரஸ்ஸ மணிக்கட்டி தோட்டத்தின் எச்.எம். பிரிவுக்குவந்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கிருளப்பனை பகுதியில் தொழில் செய்த குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி தனது வீட்டுக்கு வந்துள்ளார். எனினும், கிருளப்பனை பகுதியில் அவருடன் தங்கியிருந்த சிலருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் மணிக்கட்டி தோட்டத்துக்கு வந்த குறித்த பெண் தனிமைப்படுத்தப்பட்டார். 26 ஆம் திகதி அவரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பிரசோதனை முடிவுகள் 27 ஆம் திகதி வெளியானது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிசிஆர் பரிசோதனையும் நடத்தப்படவுள்ளது.
Post a Comment