நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி.

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 392 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 16,583 ஆக பதிவாகியுள்ளது.

மினுவாங்கொடை - பேலியகொட கொத்தணிப் பரவலில் 389 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய மூவரும் இவ்வாறு புதிய கொரோனா நோயாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்சமயம் மினுவாங்கொடை - பேலியகொட கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 13,084 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது மூன்று வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 5,206 கொரோனா நோயாளர்கள் நாடு முழுவதும் உள்ள 54 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்றைய தினம் 293 நபர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமையினால் கொரோனா தொற்றுக்குள்ளாகி நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 11,324 ஆக உயர்வடைந்துள்ளது.

இது இவ்வாறிருக்க கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 458 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதுடன், கொரோனாவினால் 53 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.