நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான செய்தி

நாட்டில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளில் வைரஸ் தொற்றுக்குள்ளான 327 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணிகளில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14,893 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கந்தானை, கொழும்பு 12 மற்றும கொழும்பு 13 பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இதற்கமைய வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆக பதிவாகியுள்ள அதேவேளை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,400 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 33 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 3, 223 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணிய 30,000 ற்கும் மேற்பட்ட முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.