இலங்கையில் மேலும் 169 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களுடன் 151 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் 18 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,187 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களுள் 5,858 பேர் இதுவரையில் பூரண குணமடைந்துள்ளதுடன் 6,305 பேர் தொடர்ந்து பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Post a Comment