நாளை முதல் நாட்டில் சில மாவட்டங்களின் தனிமைப்படுத்தலில் மாற்றம்.

தற்போது அமுலில் உள்ள சில மாவட்டங்களுக்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில், குருநாகல் நகர சபை எல்லை மற்றும் குளியாபிட்டிய போலீஸ் பிரிவிற்கும், களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை பொலிஸ் பிரிவு, இன்கிரிய பொலிஸ் பிரிவு மற்றும் வேகடை கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல மற்றும் மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்குமே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (15) காலை 5.00 மணி தொடக்கம் மேல்குறிப்பிட்ட அனைத்து பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் உத்தரவு தளர்த்தப்படும்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் உள்ள களனி பொலிஸ் பிரிவு நாளை மறுதினம் (16) அதிகாலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்படும்.

இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு, ஜா-எல, ராகமை, கடவத்தை, வத்தலை மற்றும் பேலியகொடை போன்ற பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் என ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் ஏனைய அனைத்து பகுதிகளிலும் விதிக்கப்பட்ட தனிமைபடுத்தல் நாளை (15) அதிகாலை 5.00 மணி முதல் நீக்கப்படும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.