இலங்கையில் பரவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம் குறித்து வெளியான செய்தி.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 94 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் மேலும் நான்கு உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் சிறைச்சாலை வத்தியசாலையில் இருந்து ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், சியம்பலாபே தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மேலும், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 73 பெண்ணொருவர், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், பண்டாரகம – அடலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் பாணதுறை ஆதார வைத்தியசாலையில் இருந்து தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 171 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் முன்னதாக தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 962 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 601 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 914 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 7 இலட்சத்து 55 ஆயிரத்து 105 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.