அலரிமாளிகையில் கொரோனா தொற்று...? பிரதமர் ஊடகப்பிரிவு விசேட அறிவிப்பு!

பிரதமர் அலுவலகம் மற்றும் அலரிமாளிகையில் எந்தவொரு பணியாளருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்று காரணமாக அலரிமாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் மற்றும் அலரிமாளிகையில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல் வெளியாகியுள்ளதாகவம் பிரதமர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த தகவலில் உண்மைத்தன்மை கிடையாது என பிரதமர் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமைக்கு மத்தியில் சுகாதார விதிமுறைகளுக்கமைய பிரதமர் அலுவலகம் மற்றும் அலரிமாளிகையின் நாளாந்த செயற்பாடுகள் எந்தவித தடையும் இன்றி முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது

பிரதமரின் பாதுகாப்பு பிரிவுடன் தொடர்புடைய வெளிப்புற பாதுகாப்பு பிரிவினர் மாத்திரமே கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் அலுவலகம் மற்றும் அலரிமாளிகையில் கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.