நாளை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, கரையோர பொலிஸ் பிரிவு மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு மற்றும் ராகம ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இதன்படி, குறித்த பிரதேசங்கள் நாளைக் காலை 5 மணி முதல் விடுவிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரேண்பாஸ், ஆட்டுப்பட்டி வீதி, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் மற்றும் பொறளை பொலிஸ் பிரிவின் வனாதமுல்ல கிராம் சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கொம்பனி வீதி வேகந்த கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட வத்தளை, பேலியகொட மற்றும் களனி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி மற்றும் வெள்ளம்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளின் சில பகுதிகள் நாளை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்திய உயன குடியிருப்புத் தொகுதி மற்றும் பேர்கஸன் தெற்கு வீதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், வெள்ளம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சத செவன வீடமைப்புத் தொகுதி, சாலமுல் மற்றும் விஜயபுர ஆகிய கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதற்கமைய, குறித்த பிரதேசங்கள் நாளைக் காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்குமென அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.