கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு!

கொழும்பில் மேலும் 5 பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கோட்டை, புறக்கோட்டை, மருதானை, டேம் வீதி மற்றும் கொம்பனித் தெரு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று காலை 5 மணிமுதல் இந்த தனிமைப்படுத்தல் அமுலாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள, மட்டக்குளி, மோதரை, புளூமென்டல், கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், கரையோர பொலிஸ் பிரிவு, பார்பர் வீதி, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, வாழைத்தோட்டம் மற்றும் பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் உத்தரவு தொடர்ந்து நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில், களணி பகுதியும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று காலை 5 மணிமுதல் இந்த தனிமைப்படுத்தல் அமுலாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளான ஜா-எல, நீர்கொழும்பு, றாகம, வத்தளை, பேலியகொடை மற்றும் கடவத்தை ஆகிய 6 பொலிஸ் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் உத்தரவு தொடர்ந்தும் அவ்வாறே நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த 6 பொலிஸ் பிரிவுகள் மற்றும் களணி பொலிஸ் பிரிவு ஆகியன தவிர்ந்த கம்பஹா மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் நேற்று காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் 24 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.