அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தாக்கங்களை எதிர்கொள்ள வேண்டும்! - சுகாதார அமைச்சர்

கொவிட் -19 வைரஸ் பரவலை இப்போது கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வந்தாலும் கூட மீண்டும் கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாம் கொவிட் -19 வைரஸ் தாக்கங்களுக்கு முகங்கொடுத்தாக வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் நாம் அரசியல் சார்ந்து செயற்படவில்லை. உலக சுகாதார ஸ்தாபனமும் தொடர்ச்சியாக இதனை வலியுறுத்தி வருகின்றனர். எனவேதான் தீர்மானங்கள் முடிவுகள் எடுக்கும் வேளைகளில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் நாம் இயங்கினோம்.

இதன்போது சுகாதார அதிகாரிகள், நிபுணர்கள் எமக்கு வழங்கும் அறிவுரைகளுக்கு அமைய அரசாங்கம் தீர்மானம், முடிவுகளை எடுத்தது. எனவே நாம் இப்போது வரையில் மிகவும் பொறுப்புடன் தீர்மானங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

யாரும் ஒரு நோயாளர் என அடையாளம் காணப்படும், சந்தேகிக்கப்படும் நபருக்கு 12 நாட்களுக்கு பின்னரும் எந்தவொரு நோய் மாற்றங்களும் காட்டாது போனால் அவர்களுக்கு நோய் தாக்கம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஆகவே அவர்களுக்கு பி.சி.ஆர் செய்ய தேவையும் இல்லை, எனவே அவர்களை வீடுகளுக்கு அனுப்ப முடியும்.

ஆனால் நாம் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த தீர்மானம் எடுத்துள்ளோம். எனினும் இந்த வைரஸ் உலகிற்கு புதிய வைரஸ். எனவே நாம் பி.சி.ஆர் பரிசோதனைகளில் வரும் தகவலைக் கொண்டு தொற்றுநோயாளர் என அடையாளப்படுத்தினோம். ஆனால் இன்று அவ்வாறு அல்ல. சிறுது சிறிதாக இந்த நோய் குறித்து கண்டறியப்பட்டு வருகின்றது. எனவே உடனடியாக நடைமுறைப்படுத்தும் தீர்மானங்கள் அவசியமாகும் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.