முஸ்லிம்களின் ஜனாசாக்கள் அடக்கம் சுகாதார அமைச்சு அனுமதி.

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது.

அரசின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இதனை சகோதர முஸ்லிம் ஊடகமொன்றுக்கு சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்களின் முயற்சியினால் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியில், முஸ்லிம்கள் கொரோனாவால் மரணித்தாலும், அவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம்கள் செரிவாக வாழும் ஒரு பகுதியை தெரிவுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்காக மன்னார் மாவட்டத்தில் ஒரு பகுதியை தேர்ந்தெடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டதாக இன்றைய 09.11.2020 அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த சிரேஷ்ட அமைச்சர் மேலும் அந்த சகோதர ஊடகத்துக்கு சற்றுமுன்னர் உறுதிபடத்தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.