கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்கொல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி கம்பளை வைத்தியசாலைக்கு காலில் உள்ள காயத்துக்கு மருத்துவம் பார்க்க இந் நபர் சென்றுள்ளார்.
கொழும்பில் இருந்து வந்தவர் என அறிந்த வைத்தியர் இவருக்கு பி சி ஆர் பரிசோதனை செய்துள்ளார்.
24ஆம் திகதி இரவு இவரின் கொரோனா தொற்று பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. இதில் இவருக்கு கொரோனா தொற்று உரிதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவரை கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர் கொழும்பில் தொழில் பார்த்து வந்தவர் என தெரிகிறது.
Post a Comment