மஹர சிறைச்சாலையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையினால் அங்கு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட பெரும் வன்முறை காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70இற்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் இன்று ஒன்றுகூடியமையினால் குழப்ப நிலை எற்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களின் நிலை தொடர்பில் அறிந்து கொள்ள பலர் சிறைச்சாலைக்கு அருகில் கூடியுள்ளனர்.
இதன்போது பொலிஸ் அதிகாரிகளுக்கும் அங்கு கூடியுள்ளவர்களுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை முதல் உறவினர்கள் பலர் அங்கு வருவதற்கு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வந்தவர்களில் அதிகமானோர் பெண்களாகும். அவர்கள் தங்களின் கைக்குழந்தைகளுடன் அவ்விடத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
மஹர சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், கைதிகள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றமையினால் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment