கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களை புதைப்பதற்கு அனுமதி வழங்கப் படவில்லை.


கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களை புதைப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டு விட்டதாக சமூக ஊடகங்களில் உலவும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று சுகாதாரத்துறையின் ஊடகப் பேச்சாராக செயல்படும் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.

நேற்று மாலையிலிருந்து சமூக ஊடகங்களில் கொரோனா தொற்றால் மரணமடையும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அவர்களால் அனுமதி வழங்கப் பட்டு விட்டதாக செய்திகள் பரவி வந்தன.

நீதி அமைச்சர் கெளரவ அலி சப்ரி அவர்கள் தமக்கு இது தொடர்பாக தொலைபேசி ஊடாக அறியத் தந்ததாக ஒரு குரல் பதிவும் உலவி வந்தது.

மேலும் செய்தி ஊடகங்கள் பலவும் இது தொடர்பான செய்திகளையும் வெளியிட்டது. பல இஸ்லாமிய இயக்கங்களும் இதற்கு நன்றிகளைத் தெரிவித்திருந்தன.

இவ்வாறு பரவி வந்த செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்றும் மேற்படி தகவலை ஊடகப் பேச்சாளர் உறுதிப் படுத்தினார்.

Video: https://www.facebook.com/104784747962500/posts/175213897586251/

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.