நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம, தொழிற்சாலை பிரிவில் இன்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால் 13 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு தீக்கிரையாகியுள்ளது. இதனால் 50 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர்.
தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பிரதேச வாசிகள் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்தபோதிலும் உரிய நேரத்தில் அவர்கள் வரவில்லை எனக்கூறப்படுகின்றது. மக்கள் இணைந்தே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முயற்சித்தனர்.
Post a Comment