பாடசாலைகள் 3 ஆம் தவணைக்காக திறக்கப்படும் திகதி அறிவிப்பு

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக செயற்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவிருந்த பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 3 வாரங்களுக்கு இணையம் மூலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் நாடுதழுவிய ரீதியில் உள்ள 170 தேசிய பாடசாலைகளுக்கும் அதிபர் நியமனம் விரைவாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஷ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.