நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தையும் கடந்தது

நாட்டில் நேற்று 401 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் கணாப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

அதன்படி தற்போது நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 18,075 ஆக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 401 கொரோனா தொற்றாளர்களில் 398 பேர் பேலியகொட-மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய மூவரும் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த கடற்படை ஊழியர்கள் ஆவர்.

பேலியகொட-மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 14,568 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 12,210 ஆக காணப்படுவதுடன், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 5,799 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 516 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ள நிலையில், கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாட்டில் 66 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.