நாட்டில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 443 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 187 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 709 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் 24 ஆவது உயிரிழப்பு நேற்று பதிவு செய்யப்பட்டது

அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு 13 ஐச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டநிலையில் நேற்றைய தினம் அவரது வீட்டிலேயே உயிரிழந்ததாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் மூலம் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றினால் மாரடைப்பு ஏற்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5ஆயிரத்து 858 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 305 பேர் தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில்,கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 400 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 5 இலட்சத்து 45 ஆயிரத்து 43 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.