மத்திய மாகாணத்தில் 113 பேருக்கு கொரோனா!

மத்திய மாகாணத்தில் கடந்த 2ஆம் திகதிவரை 113 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் மாத்தளை மாவட்டத்தில் அரச வைத்திய அதிகாரி உட்பட சுகாதாரப் பிரிவின் உத்தியோகத்தர் குழுவைச் சேர்ந்த 05பேரும் உள்ளடங்குவதாக மத்திய மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களுடன் சுமார் 8113 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களில் 4099 பேர் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் 4014 பேர் வரையில் சுய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

லக்கல கொரோனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 51பேர் சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தற்பாேது 49பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் சந்தேகத்திற்கிடமான 1092 பேர் வரையில் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன் அவற்றில் அரைவாசிக்கு மேற்பட்டோரின் பி.சீ.ஆர் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவ்வறிக்கையின் முடிவுகளின் பிரகாரம் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனவும் மத்திய மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.