கற்பிட்டி வைத்தியசாலையில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்றிருந்த நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு – பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களை பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கற்பிட்டி வைத்தியசாலைக்குச் சென்றிருந்த கந்தகுளி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கைவரும் வரையில் சடலம் சுகாதார பாதுகாப்பு வழிமறைகளுக்கமைய, வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைக்கப்பெற்றதுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment