கொழும்பு ICBT தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பல்கலைக்கழக மாணவருடன் தொடர்புடைய அனைவரும் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தொற்றுக்குள்ளான மாணவர் கடந்த 4 ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே குறித்த காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்துமாறும் ஏனைய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் i c b t தனியார் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment