தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விற்பனை நிலையங்கள் எதிர்வரும் 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கை அமுலில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ பிரிவுகளுக்குட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment