புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2021ஆம் ஆண்டு ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11ஆம் திகதியும், ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 12ஆம் திகதியிலிருந்து நவம்பர் 06 ஆம் திகதி வரை நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்த  அந்த திகதிகளில் மாற்றம் இல்லை எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

மேலும் தெரிவித்துள்ளதாவது,

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்டபடி அதே தினத்தில் நடைபெறும், இதவேளை உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

கம்பாஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவியமை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்காக பரீட்சையை ஒத்திவைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.