மினுவாங்கொடையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று குறித்த முழு விவரம் தெரிந்தவுடன் அதனை உடனடியாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த தயாராக உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மினுவாங்கொடை கொரோனா கொத்தணி தொடர்பில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவை தொடர்பில் உறுதியான இறுதி தீர்மானம் எட்டப்படும்வரை அது குறித்து பகிரங்கப்படுத்த முடியாது எனவும், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment