நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 586 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 115 பேருக்கும், பேலியகொடை மீன் சந்தையுடன்; தொடர்புடைய 467 பேருக்கும், நாடு திரும்பிய கடலோடிகள் 4 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியில் இருந்து மேலும் 67 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 5 ஆயிரத்து 630 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.