நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி

மினுவாங்கொடை கொத்தணியில் நேற்றைய தினம் 130 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 10 பேருக்கும், அவர்களுடன் தொடர்பினை பேணிய 120 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 721 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், கட்டார் மற்றும் குவைட் முதலான நாடுகளில் இருந்து நாடுதிரும்பி, தனிமைப்படுத்தப்பட்டிருந்த தலா ஒவ்வொருவருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதன்படி, நேற்றைய தினம் 132 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 170 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 29 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரத்து 800 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, வட மாகாணத்தில் நேற்றைய தினம் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளரான வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 224 பேருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

அதன் முடிவுகளுக்க அமைய, எவருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தினுள் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட 150 பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் அறிக்கை நேற்றைய தினம் கிடைக்க பெற்றதாக முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் 37 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை கண்;டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மெனிங் சந்தையிலுள்ள 70 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொற்றுறுதியான பெண் ஒருவரின் குறித்த வர்த்தக நிலையத்தில் பணியாற்றியதை அடுத்து இந்த தீர்;மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பெண் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.