முழு நாடும் கொரோனா தொற்று வலயமாக அறிவிப்பு

நாட்டின் தற்போதைய நிலையில் முழு நாட்டையும் கொரோனா தொற்று வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவித்தாலும் இயல்பு வாழ்க்கைக்கு ஏதுவான வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். அரச மற்றும் தனியார் நிறுவனங்களை வழமை போல் இயக்க முடியும். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நிறுவன பிரதானிகள் கடமை.

அதிகளவான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் தினமும் சேவைக்கு வரக் கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை பிரதேச சுகாதார அதிகாரிகள் தீர்மானிப்பர்.

இவ்வாறு வரும் ஊழியர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பேணுவது கட்டாயம் என்பதுடன் அடிக்கடி உடல் உஷ்ணத்தை கண்காணிக்க வேண்டுமெனவும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - தினகரன். 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.