நாட்டில் முடக்க செயற்பாடுகள் நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவித தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படாமை காரணமாக பொதுமக்கள் தேவையற்ற முறையில் உணவுப் பொருட்களை சேகரிக்க வேண்டிய அவசியமில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் தேவையற்ற முறையில் உலர் உணவுப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நாட்டின் பலபாகங்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் அமைச்சர் பந்துல குணவர்தன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
Post a Comment