சூடு பிடிக்கும் அரசியல் களம்; மனோ கணேசனின் அதிரடி முடிவு வெளியானது.

நாடாளுமன்ற உறுப்பினரான ஏ. அரவிந்தகுமார் 20 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியமைக்காக அவரை கட்சியிலிருந்த நிக்க தீர்மானத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தன.

அத்துடன் சிறுபான்மையினரின் நலன் குறித்து கருத்திற்கொள்ளாது இந்த 20 வது திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்து தமிழ் தேசிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

எவ்வாறாயினும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் உள்ளிட்ட 7 எதிர்கட்சி சிறுபான்மை உறுப்பினர்கள் 20'ம் திருத்தச்சட்டத்திற்கான வாக்கெடுப்பின் போது ஆதரவு வழங்கியிருந்தனர்.

இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான ஏ. அரவிந்தகுமார் 20 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியமை, கட்சியினதோ, தமிழ் முற்போக்கு கூட்டணியினதோ முடிவல்ல என ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஹட்டனில் கூடவுள்ள மலையக மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூட்டத்தில் அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.