டொனால்ட் ட்ரம்புக்கு உண்மையாகவே கொரோனா தொற்றா...? சற்றுமுன் வெளியான அதிர்ச்சிகர செய்தி

கொவிட்-19 தொற்றுறதியான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 24 மணிநேரத்திற்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் இருந்து, வொஷிங்டனில் உள்ள வோல்டர் றீட் தேசிய இராணுவ வைத்திய மத்திய நிலையத்திற்கு, தனது உத்தியோகபூர்வ உலங்கு வானூர்தி மூலம் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தமக்கும், தமது பாரியாருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.

டொனால்ட் ட்ரம்புக்கு தொற்று நிலைமை காணப்பட்டாலும், அவர் நல்ல நிலையில் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னதாக வெளியிட்ட காணொளி பதிவில், ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

எனினும், முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப் தொடர்பான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உதாசீனப்படுத்தியதனால், டொனால்ட் ட்ரம்ப் மீது பல தரப்பினரும் விமர்சனம் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து வைத்தியசாலைக்கு செல்லும் போது, அவர் முகக்கவசம் அணிந்து செல்லும் காணொளி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

இதேநேரம், அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 75 இலட்சத்து 47 ஆயிரத்து 935 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 13 ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 69 மரணங்கள் பதிவான நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 873 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகமொன்றை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்து.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.